Dailyhunt
இதுதாண்டா மாமன் மச்சான் உறவு..! அதித ஆக்ரோஷத்தால் சண்டை வெடிக்கும் என பயந்த ரசிகர்கள். சட்டுனு மாறிய கதை. வேற லெவல் வீடியோ.!!!

இதுதாண்டா மாமன் மச்சான் உறவு..! அதித ஆக்ரோஷத்தால் சண்டை வெடிக்கும் என பயந்த ரசிகர்கள். சட்டுனு மாறிய கதை. வேற லெவல் வீடியோ.!!!

பிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷத்திற்கும் நட்புக்கும் பஞ்சமில்லாத பல சம்பவங்கள் அரங்கேறின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ரஜத் படிதாரின் சர்ச்சைக்குரிய அவுட் விவகாரத்தால் அதிருப்தியில் இருந்தது. பின்னர் 156 ரன்கள் இலக்கை விரட்டிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், 238 ஸ்ட்ரைக் ரேட்டில் பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தார். 5-வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் கில் கொடுத்த கேட்ச்சை விராட் கோலி பிடித்து அசத்தினார்.

அப்போது கோலி காட்டிய அதீத ஆக்ரோஷமான கொண்டாட்டம், இருவருக்கும் இடையே மோதல் ஏதும் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. ஆனால், போட்டி முடிந்ததும் இருவரும் சிரித்துப் பேசி கட்டித்தழுவிய வீடியோ, "மாமன்-மச்சான்" நட்புக்கு சான்றாக அமைந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai