சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.
அப்படி ஜிம்மில் எடுக்கப்பட்ட ஒரு 'ப்ராங்க்' வீடியோ தான் இப்போது எக்ஸ் (X) தளத்தில் செம ட்ரெண்டிங். அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் டெட்லிஃப்ட் (Deadlift) செய்வதற்கு பயங்கரமாகத் தயாராகிறார். இடுப்பில் பெல்ட் எல்லாம் கட்டிக்கொண்டு அவர் கொடுக்கும் 'பில்டப்'-ஐப் பார்த்து, அங்கிருக்கும் ஒரு இளைஞர் மிகவும் ஆர்வமாக அவர் எவ்வளவு வெயிட் தூக்கப்போகிறார் என்பதை வேடிக்கை பார்க்கிறார்.
அந்தப் பெண்ணும் குனிந்து பெரிய பாரத்தை தூக்குவது போல ஆக்சன் கொடுத்துவிட்டு, திடீரென அதன் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மிகச்சிறிய கம்பியைத் தூக்கிக்கொண்டு நைசாக நழுவுகிறார். இதைப் பார்த்த அந்த இளைஞர், தான் ஏமாந்துவிட்டதை உணர்ந்து அங்கேயே சிரிக்கத் தொடங்குகிறார். "அக்கா தம்பியோட எதிர்பார்ப்புல தண்ணியை ஊத்திட்டாங்களே" என்ற கேப்ஷனுடன் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "நானும் தான் ஏமாந்துட்டேன்" என கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.

