Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஜூன் 15-குள்ள விக்ரம் வராரு" துருவ நட்சத்திரம் ரிலீஸூக்கு ஐகோர்ட் 'கிரீன் சிக்னல்'.. கௌதம் மேனனுக்குக் கிடைத்த பெரிய நிம்மதி..!!

"ஜூன் 15-குள்ள விக்ரம் வராரு" துருவ நட்சத்திரம் ரிலீஸூக்கு ஐகோர்ட் 'கிரீன் சிக்னல்'.. கௌதம் மேனனுக்குக் கிடைத்த பெரிய நிம்மதி..!!

டிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு ரிலீஸூக்குத் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தை ஜூன் 15-ஆம் தேதிக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது. படத்தின் ரிலீஸைத் தடுக்கக் கூடாது என மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஒருவேளை ஜூன் 15-க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், அதற்கான காரணங்களுடன் கால நீட்டிப்பு கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கௌதம் மேனன் தரப்பிற்குத் தெரிவித்துள்ளார்.

​பொருளாதார சிக்கல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளால் கடந்த பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த இந்தப் படம், இப்போது நீதிமன்றத்தின் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். "ஜான்" என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட வெளியீட்டிற்கு இனி எந்த முட்டுக்கட்டையும் இருக்கக்கூடாது என நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டதால், வரும் ஜூன் மாதம் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட் காத்திருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai