Dailyhunt
"கடனை திருப்பி கொடுத்தாச்சு.. இனிமேல் வேட்டைதான்.. அமீரகத்தை பகைத்துக் கொள்ளும் பாகிஸ்தான்.. பின்னணியில் இருக்கும் ஊழல் பகீர்..!!

"கடனை திருப்பி கொடுத்தாச்சு.. இனிமேல் வேட்டைதான்.. அமீரகத்தை பகைத்துக் கொள்ளும் பாகிஸ்தான்.. பின்னணியில் இருக்கும் ஊழல் பகீர்..!!

பாகிஸ்தானின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபரான மாலிக் ரியாஸைக் கைது செய்ய அந்நாட்டு அரசு இன்டர்போல் உதவியை நாடியுள்ளது.

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் இவர், தற்போது துபாயில் வசித்து வருவதோடு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையையும் பெற்றுள்ளார்.

அவரைத் திரும்ப ஒப்படைக்க அமீரக அரசு மறுத்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் காவல்துறை சர்வதேச அளவில் பிடியாணை பிறப்பித்து அவரைக் கொண்டு வரத் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தால் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சவூதி அரேபியா மற்றும் துருக்கியுடன் பாகிஸ்தான் நெருக்கம் காட்டியது அமீரகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது துபாய் கோடீஸ்வரரைக் குறிவைப்பது அந்தப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கடன்களைத் திருப்பிச் செலுத்திய கையோடு பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பனிப்போரையே உருவாக்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai