திருவாரூர் மாவட்டம் அருகே 17 வயது மகன், தனது தந்தையை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிடெக்னிக் படித்து வந்த அந்த மாணவர் சரியாகக் கல்லூரிக்குச் செல்லாததை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மகன் அருகில் இருந்த பீர் பாட்டிலால் தந்தையின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த தந்தை சிகிச்சைக்காக முதலில் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தச் சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

