Dailyhunt
"காமராஜர் தோற்றார்.. ஸ்டாலின் தோற்றார்".. ரசிகர்கள் அரசியலைத் தீர்மானிக்கிறார்களா?.. பிரகாஷ் ராஜ் காட்டம்..!!!!

"காமராஜர் தோற்றார்.. ஸ்டாலின் தோற்றார்".. ரசிகர்கள் அரசியலைத் தீர்மானிக்கிறார்களா?.. பிரகாஷ் ராஜ் காட்டம்..!!!!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழக சமூகம் 'ரசிகர் மயமாகி' இருப்பதே தவிர, 'அரசியல் மயமாகவில்லை' என்பது நிரூபணமாகி இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் ஒரு எதிர்க்கட்சிக்கு இணையான பணிதான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்கத் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, தனது பதிவில் "காமராஜர் தோற்றார்… மு.க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார்" என்று குறிப்பிட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிறந்த மக்கள் பணியாற்றிய தலைவர்களே தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் கொள்கை சார்ந்த அரசியலை விடத் தனிநபர் கவர்ச்சிக்கும் ரசிகர் மனநிலைக்கும் முக்கியத்துவம் அளிப்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள இந்தச் சுருக்கமான அதேசமயம் ஆழமான பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai