Dailyhunt
"கனவு விலைக்கே! ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம்!"..  ஆப்பிளின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தில் நீங்களும் ஒரு ஐபோன் ஓனர் ஆகலாம்..!!

"கனவு விலைக்கே! ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம்!".. ஆப்பிளின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தில் நீங்களும் ஒரு ஐபோன் ஓனர் ஆகலாம்..!!

ப்பிள் நிறுவனம் தனது 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐபோன் பிரியர்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இருக்கும் மவுசை கருத்தில் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான 'இமேஜின் ஸ்டோர்' மூலம் இந்த சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ரூ.47,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1,49,900 விலையுள்ள இந்த போனை, வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் மதிப்புகளைப் பயன்படுத்தி சுமார் ரூ.89,900 என்ற ஆரம்ப விலையிலேயே வாங்க முடியும்.

அதேபோல், ஐபோன் 17 மாடலை வாங்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இதன் அசல் விலை ரூ.82,900 ஆக இருந்த நிலையில், அனைத்து சலுகைகளையும் சேர்த்தால் வெறும் ரூ.37,900-க்கே பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,000 கூடுதல் தள்ளுபடியும், பழைய போன்களை மாற்றும்போது ரூ.36,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பும் வழங்கப்படுகிறது. புதிய ஐபோன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த 50-வது ஆண்டு விழாக்கால சலுகை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai