Dailyhunt
"கனிமொழி கார்ல என்ன இருக்கு?" மடக்கிப் பிடித்த பறக்கும் படை.. அதிரடி சோதனை..!!

"கனிமொழி கார்ல என்ன இருக்கு?" மடக்கிப் பிடித்த பறக்கும் படை.. அதிரடி சோதனை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக எம்பி கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 2) தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதைக் கண்டறிய இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

​அதிகாரிகளின் இந்தத் திடீர் சோதனையினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சோதனையின் முடிவில் கனிமொழியின் வாகனத்தில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அனுமதி அளித்ததை அடுத்து கனிமொழி தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தங்குதடையின்றித் தொடர்ந்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai