Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கரூருக்குப் பறக்கும் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு அதிரடியாக அரசு பணி நியமன ஆணை - முழு விவரம்!

கரூருக்குப் பறக்கும் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு அதிரடியாக அரசு பணி நியமன ஆணை - முழு விவரம்!

மிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு அதிரடிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டு கூட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்திற்குப் பிறகு, முதல்வர் விஜய் முதன்முறையாக கரூர் செல்வதால் இந்தத் துயரச் சம்பவத்தின் வடுக்கள் இன்னும் மறையாத நிலையில் அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பையும், அரசியல் வட்டாரத்தில் பரவபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைய பயணத்தின் போது அவர் கரூர் மாவட்ட மக்களுடன் நேரடியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிய உள்ளார்.

​இந்த அரசு முறைப் பயணத்தின் போது, கடந்த செப்டம்பர் மாத நெரிசல் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் நேரில் வழங்குகிறார். விபத்துக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கையாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர கரூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதால், ஒட்டுமொத்த மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai