Dailyhunt
"கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியது ஏன்..?" சரியோ தவறோ.. மக்கள் என்னைப் பற்றி பேசணும்.. உண்மையை உடைத்த பூனம் பாண்டே.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

"கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியது ஏன்..?" சரியோ தவறோ.. மக்கள் என்னைப் பற்றி பேசணும்.. உண்மையை உடைத்த பூனம் பாண்டே.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

பாலிவுட் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர் பூனம் பாண்டே. கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய இவர், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் அனைவரையும் அதிர வைத்தார்.

ஆனால், அது ஏப்ரல் 1-ஆம் தேதி ரசிகர்களை ஏமாற்றுவதற்காக அவர் செய்த நாடகம் என்பது பின்னர் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பூனம் பாண்டே, தான் செய்தது சரிதான் என நியாயப்படுத்தியுள்ளார்.

"சரியோ தவறோ, மக்கள் நம்மைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் திரையுலகில் நமக்கான அடையாளம் நிலைத்திருக்கும்; இல்லையென்றால் மக்கள் நம்மை எளிதில் மறந்துவிடுவார்கள்" என்று அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பிடிவாதமான பேச்சு ரசிகர்களிடையே இன்னும் அதிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவருக்கு எதிரான கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai