திருச்சூரில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதியினர், சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
மேலும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், சமீபகாலமாக மனைவியின் நடத்தை மீது கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் மற்றும் தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சம்பவத்தன்று ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருந்த கணவனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு கொலையில் முடிந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

