தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தற்போதே காய்கள் நகர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு மாஸ்டர் பிளானுடன் களமிறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 'தொங்கு சட்டசபை' அமையும் பட்சத்தில், ஆட்சி அமைப்பதில் தவெக தான் "கிங் மேக்கராக" இருக்கும் என விஜய் கணக்கு போடுவதாகத் தெரிகிறது. இதற்காக, மற்ற பெரிய கட்சிகளின் குதிரை பேரத்திற்குத் தனது கட்சி வேட்பாளர்கள் அடிபணியாமல் இருக்க, வெற்றி பெறும் வேட்பாளர்களை நேரடியாகத் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, அவர்களைக் கொண்டே கட்சியை இரும்புக்கோட்டையாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார்.
மற்றவர்கள் போடும் கணக்கை விட, விஜய்யின் இந்த 'சைலண்ட்' அரசியல் வியூகம் தமிழகத்தின் பிரதான கட்சிகளை இப்போதே யோசிக்க வைத்துள்ளது.

