Dailyhunt
"கிரிக்கெட் பார்க்க வந்த இடத்தில் இப்படியா!". ஐபிஎல் மேட்சில் பயங்கர குத்துச்சண்டை.. அதிர்ச்சி வீடியோ..!!!!

"கிரிக்கெட் பார்க்க வந்த இடத்தில் இப்படியா!". ஐபிஎல் மேட்சில் பயங்கர குத்துச்சண்டை.. அதிர்ச்சி வீடியோ..!!!!

க்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 1, 2026) நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டி, கிரிக்கெட் ஆட்டத்தை விட ரசிகர்களின் மோதலாலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் வீரர்கள் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசிக் கொண்டிருந்த நேரத்தில், ரசிகர்களுக்கான ஸ்டாண்டில் இரு பிரிவினரிடையே திடீரென மோதல் வெடித்தது.

முதலில் வாக்குவாதத்தில் தொடங்கிய இந்த சண்டை, அடுத்த சில நிமிடங்களிலேயே ஒருவரையொருவர் சட்டையைப் பிடித்து இழுத்து, சரமாரியாக கைக்கலப்பில் ஈடுபடும் அளவிற்கு முற்றியது. இதில் ரசிகர்கள் ஒருவரையொருவர் கால்களால் எட்டி உதைத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மைதானத்தில் இருந்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் இந்த வன்முறையைப் பார்த்து கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். நிலைமை கைமீறிச் சென்றதைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு தைரியமான போலீஸ் அதிகாரி, உடனடியாக மோதலில் ஈடுபட்டவர்களைப் பிரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இந்த சண்டையால் மைதானத்தில் இருந்த மற்ற ரசிகர்களின் கவனம் சிதறியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை, டெல்லி அணி 19 பந்துகள் மீதமிருக்கையிலேயே எட்டியது.

டெல்லி அணியின் சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருக்குத் துணையாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 39 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai