Dailyhunt
கோடைகாலம் ஆரம்பிச்சுட்டு.! உங்க வீட்டுக்குள்ள இது இருந்துச்சுன்னா உஷாரா இருங்க.. குளிர்ச்சியை தேடி வீட்டுக்கே வரும் பாம்புகள். இதை மறந்துடாதீங்க..!!

கோடைகாலம் ஆரம்பிச்சுட்டு.! உங்க வீட்டுக்குள்ள இது இருந்துச்சுன்னா உஷாரா இருங்க.. குளிர்ச்சியை தேடி வீட்டுக்கே வரும் பாம்புகள். இதை மறந்துடாதீங்க..!!

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தைத் தாள முடியாமல் குளிர்ச்சியான இடங்களைத் தேடி பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வீடுகளில் பாம்பின் சட்டை (தோல்) தென்பட்டால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பநிலை உயரும்போது பாம்புகள் தங்களின் உடல் வெப்பத்தைத் தணிக்கக் குளிர்ச்சியான இடங்களைத் தேடுகின்றன. இத்தகைய சூழலில், வீட்டின் சமையலறை, குளியலறை அல்லது செடி கொடிகள் நிறைந்த பகுதிகளில் அவை தஞ்சமடைகின்றன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான வகைப் பாம்புகள் இருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நச்சுத்தன்மை கொண்டவை. இருப்பினும், பாதுகாப்பு கருதி அனைத்துப் பாம்புகளிடமிருந்தும் விலகி இருப்பதே சிறந்தது.

பாம்புகள் வளரும்போது அவற்றின் பழைய தோல் நீக்கப்பட்டு புதிய தோல் உருவாகும். இது 'சட்டை உரித்தல்' எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு பாம்பின் உடலில் ஒரு இறந்த தோல் படலம் உருவாகும். இந்தத் தோல் வளர வளர பாம்பின் இயக்கம் மெதுவாகும். சில நாட்களில் அந்த இறந்த தோல் தானாகவே பாம்பின் உடலிலிருந்து பிரிந்துவிடும். இது பார்ப்பதற்கு வலை போன்ற அமைப்பில் மெல்லியதாக இருக்கும்.

உங்கள் வீட்டிலோ அல்லது வீட்டின் அருகிலோ பாம்பின் சட்டை தென்பட்டால், அது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம். சட்டை எங்குக் கிடக்கிறதோ, அந்தப் பகுதியிலேயே அந்தப் பாம்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பாம்பின் சட்டையை வெறும் கையால் தொடக்கூடாது. ஒரு குச்சியின் உதவியுடன் அதனை அகற்றி வீட்டிற்கு வெளியே வீச வேண்டும். பாம்பின் சட்டையை வைத்தே அது எவ்வளவு நீளம் இருக்கும், அது நச்சுத்தன்மை கொண்டதா இல்லையா என்பதைப் பாம்பு பிடி வீரர்கள் அல்லது நிபுணர்களால் கணிக்க முடியும்.

வீட்டில் பாம்பின் சட்டை தென்பட்டால், உடனடியாக அப்பகுதியில் தேவையற்ற பொருட்கள் அல்லது குப்பைகள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். சந்தேகம் இருந்தால், சுயமாகப் பாம்பைத் தேடாமல் அங்கீகரிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்கள் அல்லது வனத்துறையினரின் உதவியை நாடுவது உயிருக்கு பாதுகாப்பானது. மேலும் கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், புதர்கள் இல்லாமலும் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai