Thursday, 22 Apr, 11.11 pm செய்தி சோலை

முகப்பு
கொரோனா தடுப்பு முறை..உயர்மட்ட அதிகாரிகளுடன் மோடி நாளை ஆலோசனை.. மேற்கு வங்காள பிரசாரம் ரத்து..!!!

இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் மக்களைப் பாதுகாப்பதற்காக மாநில அரசு தரப்பிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பின்பற்றபட்டு வருகின்றன. மேலும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் போன்றவைகளை பின்பற்றி கொரோனாவிற்கும் மக்களுக்கும் பெருமளவில் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது.

ஆனாலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பரவலின் காரணமாக தடுப்பு பணி குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக சமூகவலைதளங்களில் தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் இந்த ஆலோசனை காரணமாக மேற்கு வங்காள பிரச்சாரத்தை முற்றிலும் தவிர்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithisolai
Top