Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குழந்தைகளை பிளாக்மெயில் செய்ததாக பரபரப்பு புகார்.. முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் பரப்புரை வீடியோவால் வந்த திடீர் சிக்கல்..!!

குழந்தைகளை பிளாக்மெயில் செய்ததாக பரபரப்பு புகார்.. முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் பரப்புரை வீடியோவால் வந்த திடீர் சிக்கல்..!!

முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில் பல்வேறு அதிரடியான புகார்கள் தெரிவிக்கப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தவெக கட்சிக்கு வாக்களிக்குமாறு பெற்றோரை வற்புறுத்துமாறு குழந்தைகளிடம் வேண்டுகோள் விடுத்ததன் மூலம், குழந்தைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்திப் பெற்றோர்களைப் பிளாக்மெயில் செய்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் குழந்தைகளை இத்தகைய முறையில் ஈடுபடுத்தியது சட்டவிரோதம் என திமுக தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

​மேலும், முதலமைச்சர் விஜய் தனது இறுதி தேர்தல் பரப்புரையின் போது பேசிய வீடியோ ஆதாரங்களையும் திமுக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி (Representation of the People Act) வாக்காளர்களைக் கவர்வதற்காக இத்தகையப் பரப்புரைகளை மேற்கொண்டது கடுமையான குற்றம் என அந்த மனுவில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக திமுக எடுத்துள்ள இந்த அடுத்தகட்ட சட்டப் போராட்டம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai