இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார், எம்.எஸ்.தோனி குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்று பிரவீன் குமார் புகழ்ந்துள்ளார். தான் பல முன்னணி வீரர்களுடன் விளையாடியுள்ள போதிலும், தோனியைப் போல மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட ஒருவரைப் பார்த்ததே இல்லை என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தோனியிடமிருந்து தான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் 'மன உறுதி' என்று பிரவீன் குமார் குறிப்பிட்டுள்ளார். ஒருவருடைய மனநிலை (Mindset) சரியாக இருந்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதையும், வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தோனி அடிக்கடி உணர்த்தியதாக அவர் கூறியுள்ளார். "எனக்கு எப்போதுமே மாஹி பாய் மீது தனி மரியாதை உண்டு, ஐ லவ் யூ மாஹி பாய்" என அவர் முடித்தது தோனி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

