Dailyhunt
"மகனை குணப்படுத்த மகளை கொல்லனுமா!". மாந்திரீகன் விரித்த வலை.. பதறவைக்கும் நரபலி பயங்கரம்..!!!

"மகனை குணப்படுத்த மகளை கொல்லனுமா!". மாந்திரீகன் விரித்த வலை.. பதறவைக்கும் நரபலி பயங்கரம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், பெற்ற மகளையே தாய் ஒருவரே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

தன் மகனின் தீராத உடல் மற்றும் மனநல கோளாறுகளை குணப்படுத்த வேண்டும் என்றால், ஒரு கன்னிப் பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என மாந்திரீகன் கூறியதை நம்பி, இந்த கொடூரத்தை அந்த தாய் செய்துள்ளார்.

கடந்த மார்ச் 24-ம் தேதி கிராமமே ராமநவமி கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரத்தில், மாந்திரீகன் சாந்தி தேவி மற்றும் அவனது உதவியாளர் பீம் ராம் ஆகியோருடன் சேர்ந்து 55 வயதான ரேஷ்மி தேவி தனது வளரிளம் பருவ மகளை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

இந்த கொலையை மறைக்க, சிறுமியின் உடலை தோட்டத்தில் புதைத்த அந்த கும்பல், இது ஒரு பாலியல் வன்கொடுமை கொலை என்று நாடகமாடி போலீஸாரை திசைதிருப்ப முயன்றனர். ஆனால், உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனையில் இது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது.

இந்த வழக்கில் தாய் ரேஷ்மி தேவி, மாந்திரீகன் சாந்தி தேவி மற்றும் உதவியாளர் பீம் ராம் ஆகிய மூவரையும் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தன் மகனை குணப்படுத்த மகளையே பலிகொடுத்த இந்த சம்பவம் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai