Dailyhunt
மகனின் முதல் சம்பளம்.. வீட்டிற்கு வந்த புது பிரிட்ஜ்.. ஆனந்தக் கண்ணீரில் பெற்றோர்.. இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

மகனின் முதல் சம்பளம்.. வீட்டிற்கு வந்த புது பிரிட்ஜ்.. ஆனந்தக் கண்ணீரில் பெற்றோர்.. இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

டின உழைப்பால் கிடைக்கும் வெற்றி எப்போதும் இனிமையானது என்பதை நிரூபிக்கும் வகையில், பீகாரைச் சேர்ந்த சுஜித் என்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் சுஜித், தனது கடின உழைப்பால் ஈட்டிய பணத்தைக் கொண்டு தனது வீட்டிற்கு முதல் முதலாக ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்கியுள்ளார்.

அந்தப் பெட்டியைத் திறக்கும்போது அவரது பெற்றோரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழச் செய்கிறது. குறிப்பாக, தனது தாயாரைக் கொண்டு அந்தப் புதிய பிரிட்ஜின் உறையைப் பிரிக்கச் சொன்னது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சுஜீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சியான வீடியோவை இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். "பெற்றோர்கள் புன்னகைக்கும் இடத்தில்தான் கடவுள் வசிக்கிறார்" எனப் பல இணையவாசிகள் சுஜித்தின் இந்தச் செயலைப் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

A post shared by sujeet vlogs 05 (@sujeet_vlogs_05)

">

நகரங்களில் சாதாரணமாகத் தெரியும் ஒரு பொருள், கிராமப்புறங்களில் ஒரு மகனின் உழைப்பால் வீட்டிற்குள் வரும்போது அது ஒரு பெரிய திருவிழாவைப் போலவே கொண்டாடப்படுகிறது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai