கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தனது மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
\
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரை மீண்டும் அழைத்துச் செல்ல வந்த மருமகனுக்கும், மாமனாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்த மருமகன், சரமாரியாகச் சுட்டதில் மாமனார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனை கொலையில் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

