மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் கணவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் 38 வயதான ஜெகதீஷ் தாபர் என்பவர், தனது இரண்டாவது மனைவி ரீமாபாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து, மரக்கட்டையால் அவரைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரீமாபாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதனால் கொலை செய்த பிறகும் எவ்வித குற்ற உணர்வும் இன்றி, ஜெகதீஷ் தனது மனைவியின் சடலத்தைக் கட்டிலிலேயே போட்டுவிட்டு, அதன் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். சுமார் இரண்டு நாட்களாக சடலத்துடன் அதே வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர்களது இரண்டு குழந்தைகளும் அந்த வீட்டிலேயே இருந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஜெகதீஷின் தந்தை அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், ரீமாபாயின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மனைவியைக் கொன்று சடலத்துடன் தங்கியிருந்த ஜெகதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

