Saturday, 09 Jan, 10.29 am செய்தி சோலை

முகப்பு
மனதையே உலுக்கும் சம்பவம். 10 பச்சிளம் குழந்தைகள் பலி. மருத்துவமனையில் கோர தீ விபத்து.!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழு குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் அம்மாநிலத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் அறிவித்துள்ளார். இந்த கொடூர தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். மேலும் சில முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithisolai
Top