Dailyhunt
"மனிதாபிமானம் இன்னும் சாகல!".. கூட்ட நெரிசலிலும் குறையாத அன்பு.. அந்த நாய் செய்த காரியம்.. உதவிய நபருக்கு குவியும் பாராட்டு..   வைரலாகும் வீடியோ..!!

"மனிதாபிமானம் இன்னும் சாகல!".. கூட்ட நெரிசலிலும் குறையாத அன்பு.. அந்த நாய் செய்த காரியம்.. உதவிய நபருக்கு குவியும் பாராட்டு.. வைரலாகும் வீடியோ..!!

மும்பை மின்சார ரயிலில் தாகத்துடன் இருந்த தெருநாய் ஒன்றிற்கு பயணி ஒருவர் தண்ணீர் கொடுத்து உதவிய நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கூட்ட நெரிசல் மிகுந்த அந்த ரயிலில், தாகத்தால் தவித்த அந்த நாய் தானாகவே ஒரு தண்ணீர் பாட்டிலைத் திறக்க முயன்றதைக் கண்ட அந்தப் பயணி, தனது பாட்டிலில் இருந்து பொறுமையாக தண்ணீர் ஊற்றினார்.

அந்த நாயும் ரயிலின் நடுவே அமர்ந்து ரசித்துக் குடித்தது. பரபரப்பான மும்பை வாழ்க்கையிலும் சக உயிரின் மீது காட்டிய இந்த அன்பு, அங்கிருந்த மற்ற பயணிகளையும் நெகிழச் செய்தது.இந்த வீடியோவை பார்த்த ஆயிரக்கணக்கான இணையதளவாசிகள் அந்த நபரின் மனிதநேயத்தைப் பாராட்டி வருகின்றனர்.

கோடைகாலத்தில் தெருவில் வசிக்கும் விலங்குகள் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதால், இதுபோன்ற உதவிகள் மிகவும் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், அந்த நபர் தண்ணீர் கொடுத்த பிறகு பிளாஸ்டிக் பாட்டிலை கையாண்ட விதம் குறித்து சிலர் கவலை தெரிவித்தாலும், ஒரு உயிரின் தாகத்தைப் போக்கிய அவரது செயல் பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai