Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மர்மமாக இறந்த சிறுவன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்த 'ட்விஸ்ட்'. கைதான தாய். தமிழகத்தை உலுக்கிய கொடூரம்..!!!

மர்மமாக இறந்த சிறுவன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்த 'ட்விஸ்ட்'. கைதான தாய். தமிழகத்தை உலுக்கிய கொடூரம்..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், பெற்ற தாயே குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆரம்பத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறி, பெற்றோர் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் தீவிர விசாரணைக்குப் பிறகு இது இயற்கை மரணமல்ல, திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்தனர்.

மேலும் காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சிறுவன் சரியாக சாப்பிடாமல் அடம்பிடித்ததாலும், அதிகப்படியான குறும்பு செய்ததாலும் ஆத்திரமடைந்த தாய், ஆத்திரத்தில் அவனது கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது.

இந்நிலையில் தனது செயலை மறைக்க சிறுவன் மயங்கி விழுந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொடூரச் செயலைச் செய்த தாயை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே தன் மகனை அடித்துக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai