Dailyhunt
"மறுபடி கை வச்சா விளைவு மோசமா இருக்கும்!".. ஈரான் விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. டிரம்ப் முடிவை பாராட்டிய புதின்.. போரை நிறுத்தப் போகும் அந்த ஒரு போன் கால்..!!

"மறுபடி கை வச்சா விளைவு மோசமா இருக்கும்!".. ஈரான் விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. டிரம்ப் முடிவை பாராட்டிய புதின்.. போரை நிறுத்தப் போகும் அந்த ஒரு போன் கால்..!!

ஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே சுமார் 90 நிமிடங்களுக்கும் மேலாக தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்த உரையாடலின் போது ஈரான் போர் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்க டிரம்ப் எடுத்த முடிவை புதின் பாராட்டியதோடு, இது பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்பட ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் ராணுவத் தாக்குதலில் ஈடுபட்டால், அது ஈரான் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், ராஜதந்திர ரீதியாக அமைதியைக் கொண்டு வரவும் ரஷ்யா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவின் முயற்சியின் காரணமாகவே இந்தத் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai