Dailyhunt
"மேட்ச் இல்லனாலும் நம்ம ஆளு சும்மா இருக்க மாட்டாரு" மழையினால் நின்ற ஆட்டம்.. மைதானத்தில் சாஹல் செய்த சேட்டை.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!

"மேட்ச் இல்லனாலும் நம்ம ஆளு சும்மா இருக்க மாட்டாரு" மழையினால் நின்ற ஆட்டம்.. மைதானத்தில் சாஹல் செய்த சேட்டை.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!

பிஎல் 2026 தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்த போது, 3.4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆடுகளம் மற்றும் அவுட்ஃபீல்ட் ஈரமாக இருந்ததால், நடுவர்கள் ஆட்டத்தை ரத்து செய்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியை வழங்கினர்.

​ஆட்டம் தடைபட்ட அந்த நேரத்தில், பஞ்சாப் அணியின் நட்சத்திர ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மைதானத்தில் செய்த சேட்டைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. கொல்கத்தா அணியின் ஃபீல்டிங் கோச் திஷாந்த் யாக்னிக் அருகில் சென்ற சாஹல், அவரிடம் பேட்டிங் செய்வது போலவும், சிக்ஸர் அடிப்பது போலவும் ஜாலியாகக் கிண்டல் செய்தார். இதற்குப் பதிலுக்கு திஷாந்த் தனது தலையை மூடிக்கொண்டு பயப்படுவது போல நடித்தது அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தது. 18 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்ட சாஹல், தற்போது 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளுடன் பஞ்சாப் அணியின் முக்கியத் தூணாக விளங்கி வருகிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai