Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மீண்டும் சேர்ந்தது இபிஎஸ் பெயர்" - 'நமது அம்மா' நாளிதழில் அதிரடி மாற்றம்.. எடப்பாடி கூடாரத்தில் மெகா கொண்டாட்டம்..!!

"மீண்டும் சேர்ந்தது இபிஎஸ் பெயர்" - 'நமது அம்மா' நாளிதழில் அதிரடி மாற்றம்.. எடப்பாடி கூடாரத்தில் மெகா கொண்டாட்டம்..!!

மிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் முடிவுக்கு வந்து, பிளவுபட்டிருந்த இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக ஒன்றிணைந்துள்ள நிலையில், தற்போது அதன் முதல் அதிரடி மாற்றமாக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' நாளிதழில் முக்கிய திருப்பம் அரங்கேறியுள்ளது.

இந்நாளிதழின் 'நிறுவனர்' பதவியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மீண்டும் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது, எடப்பாடி கூடாரத்து தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​முன்னதாக, கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான மோதல்கள் மற்றும் பிளவுகள் காரணமாக இந்த நாளிதழ் பக்கங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் பெயர் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது இரு தரப்பும் தங்களின் பழைய பகையை மறந்து, கைகோர்த்து முழுமையாக ஒன்றிணைந்துள்ள சூழலில், கட்சியின் தலைமை மற்றும் நாளிதழின் நிர்வாகப் பொறுப்பு எடப்பாடி பழனிசாமியிடம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளதை இந்த பெயர் சேர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக சோசியல் மீடியாவில் இந்த செய்தி செம வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai