காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், தார்மீக நீர் உரிமையையும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர், இந்த விவகாரத்தில் உடனடியாக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
கர்நாடகாவின் தன்னிச்சையான அணை கட்டும் முயற்சியை முறியடிக்க, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட சட்ட ரீதியிலான அனைத்து வழிகளிலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக, தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளை எவ்வித தொய்வும் இன்றி மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் பிறப்பித்துள்ள இந்த அவசர ஆணை, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

