Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மொபைலை வச்சு இப்படி ஒரு அட்ராசிட்டியா?".. அண்டை வீட்டாரின் அந்தரங்கத்தை திருடிய முதியவர். குடியிருப்பாளர்களை உலுக்கிய பகீர் வீடியோ..!!!

"மொபைலை வச்சு இப்படி ஒரு அட்ராசிட்டியா?".. அண்டை வீட்டாரின் அந்தரங்கத்தை திருடிய முதியவர். குடியிருப்பாளர்களை உலுக்கிய பகீர் வீடியோ..!!!

வுசிங் காம்ப்ளக்ஸ் (Housing Complex) குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் முதியவர் ஒருவர், தனது அண்டை வீட்டுக்காரர்களின் அனுமதியோ சம்மதமோ இல்லாமல், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைத் திருட்டுத்தனமாகத் தனது மொபைலில் வீடியோ பதிவு செய்த அதிர்ச்சியூட்டும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அந்தப் பகுதியில் ஏதோ மர்ம நடமாட்டம் இருப்பதை உணர்ந்த சக குடியிருப்பாளர்கள், உஷாராகித் தங்களது மொபைல் கேமராவை ஜூம் (Zoom) செய்து பார்த்த போதுதான் இந்த மெகா விபரீதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த வீடியோவில், அந்த முதியவர் தனது வீட்டின் ஜன்னல் வழியே பாதி உடலை ஆபத்தான முறையில் வெளியே நீட்டி, பக்கத்து வீட்டு அறையில் நடப்பதை எட்டிப் பார்த்துத் திருட்டுத்தனமாக வீடியோ ரெக்கார்ட் செய்கிறார்.

இந்த விவகாரத்தில், "கொஞ்சம் கால் பிசகியிருந்தால் சாச்சா நேராக எமலோகத்திற்குத் தான் போயிருப்பார்" என்றும், "இன்றைய காலத்தில் வைரல் ஆகவும், வதந்தி பரப்பவும் மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்" என்றும் நெட்டிசன்கள் கமெண்டுகளில் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.

பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே மக்களின் தனிமனித சுதந்திரத்திற்கும் (Privacy), பாதுகாப்புக்கும் மாபெரும் முட்டுக்கட்டை போடும் வகையில் அரங்கேறியுள்ள இந்த நூதன 'நோட்டம்' பார்க்கும் வீடியோ, தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி இணையத்தை அடியோடு உலுக்கி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai