மும்பையின் கோட்டை பகுதியில் உள்ள தெருக்களில் பெண்கள் சிலரைப் பின்தொடர்ந்து, அவர்கள் முன்னிலையில் ஒரு நபர் அநாகரீகமான முறையில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகாரைப் பதிவு செய்த பெண்கள், அந்த நபர் தங்களை நீண்ட நேரமாகப் பின்தொடர்ந்து வந்ததாகவும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே இத்தகைய அருவருப்பான செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது காட்டுத்தீயாய் பரவி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரின் அடிப்படையில், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் மற்றும் பெண்களின் கண்ணியத்திற்கு ஊறு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அந்த மர்ம நபரைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

