Dailyhunt
நடு ரோட்டில் வெடித்த மோதல்.! உத்து பார்த்ததும் உண்மை தெரிஞ்சிட்டு.. டேய் மச்சான் நீயாடா. விபத்தில் பூத்த நட்பு. கலங்க வைக்கும் காணொளி..!!

நடு ரோட்டில் வெடித்த மோதல்.! உத்து பார்த்ததும் உண்மை தெரிஞ்சிட்டு.. டேய் மச்சான் நீயாடா. விபத்தில் பூத்த நட்பு. கலங்க வைக்கும் காணொளி..!!

சாலைகளில் அல்லது பொது இடங்களில் தெரியாத நபர்களிடம் மோதிக் கொண்டால் பொதுவாக சண்டையோ அல்லது வாக்குவாதமோ ஏற்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறிய மோதல் பல ஆண்டுகால நட்பை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

சாலையில் சென்று கொண்டிருந்த இருவர் எதிர்பாராதவிதமாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் அந்நியராகப் பார்த்துக் கொண்ட போது லேசான கோபம் தெரிந்தாலும், அடுத்த நொடியே ஒருவரின் முகத்தை மற்றொருவர் உற்றுப் பார்த்தனர்.

தன்னுடன் மோதியது பல காலங்களாகத் தான் தேடிக்கொண்டிருந்த, பிரிந்திருந்த "உயிர் நண்பன்" என்பதை உணர்ந்த அடுத்த நொடி, இருவரின் முகத்திலும் பழைய நினைவுகள் நிழலாடின. அடுத்த கணமே கோபம் மறைந்து, இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கண்ணீர் மல்கத் தழுவிக் கொண்டனர். மேலும் இப்படி ஒரு நட்பு யாருக்கு கிடைக்கும்? இது வெறும் மோதல் அல்ல, விதியின் சந்திப்பு என இணையவாசிகள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது உணர்ச்சிகளைக் கொட்டி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai