Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நகைப்பிரியர்களுக்கு அடித்த  ஜாக்பாட்.. நேற்று ரூ.1600 சரிந்த நிலையில் இன்றும் குறைந்தது..!!

நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. நேற்று ரூ.1600 சரிந்த நிலையில் இன்றும் குறைந்தது..!!

லகளாவிய பொருளாதாரச் சூழல் மாற்றங்களால் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக, சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாகக் குறைந்து நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெருத்த ஆறுதலை அளித்துள்ளது.

நேற்று தங்கம் விலையில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ. 1,600 சரிவடைந்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 30 குறைந்து ரூ. 13,220-க்கு விற்பனையாகும் வேளையில், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,45,000-க்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களாக முந்தைய வரலாற்று உச்சங்களைத் தொட்டு சாமானியர்களை அதிர வைத்த தங்கம் விலை, தற்போது இரண்டு நாட்களில் மட்டும் மொத்தமாகச் சவரனுக்கு ரூ. 1,840 வரை சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai