தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை அள்ளி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காமல் இழுபறி நீடித்து வரும் வேளையில், தவெக ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் (X) பதிவிட்டுள்ள ட்வீட் செம வைரலாகி வருகிறது.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக கடிதம் அனுப்பியிருந்த நிலையில், திடீர் திருப்பமாக "திமுகவும் அதிமுகவும் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது; எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர்" என்ற அதிர்ச்சி தகவல் பரவி தவெக கூடாரத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
இதனால் அப்செட்டில் இருக்கும் விஜய் ரசிகர்களையும் தொண்டர்களையும் குஷிப்படுத்தும் விதமாக, விஜய்யின் 'கோட்' பட இயக்குநர் வெங்கட் பிரபு, "நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்" என செம பாசிட்டிவாகப் பதிவிட்டு தவெக-வினருக்கு புது தெம்பை ஊட்டியுள்ளார்.

