Dailyhunt
"நாமம் போட்டுட்டாங்க!"  - இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்குதல்.. கட்சி மாறத் தயாராகும் நிர்வாகிகள்?  வெடித்த உட்கட்சிப் பூசல்..!!

"நாமம் போட்டுட்டாங்க!" - இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்குதல்.. கட்சி மாறத் தயாராகும் நிர்வாகிகள்? வெடித்த உட்கட்சிப் பூசல்..!!

கே.ஏ. செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை குறித்துப் பல்வேறு அதிரடிப் புகார்களை முன்வைத்துள்ளார்.

அதிமுகவில் தேர்தல் வேட்பாளர் மனுவுக்காகப் பணம் கட்டிய பலருக்கு சீட் வழங்காமல், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு 'நாமம்' போட்டு ஏமாற்றிவிட்டதாக அவர் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலர், அடுத்தடுத்து வேறு கட்சிகளுக்கு மாறத் தயாராகி வருவதாகவும் அவர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

குறிப்பாக, தன்னை நடுத்தெருவில் நிறுத்திவிடுவேன் என்று சவால் விட்ட மாவட்டச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ், தற்போது தனக்கே சீட் கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்பதாகச் செங்கோட்டையன் சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், செங்கோட்டையனின் இந்த "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்" பாணி விமர்சனம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai