இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாகப் போற்றப்படும் எம்.எஸ்.தோனிக்கும், தற்போதைய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கும் இடையிலான ஒரு அபூர்வமான 'கனவு' மற்றும் அது நனவான சம்பவம் குறித்து சஞ்சு பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
சஞ்சு சாம்சன் தனது கனவு குறித்துப் பேசுகையில்,
ஒருமுறை என் கனவில் தோனி பாய் கேப்டனாக இருந்தார். அவர் ஃபீல்டிங் செட் செய்து கொண்டிருந்தார். நான் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தோனி என்னைப் பார்த்து, 'சஞ்சு, அங்கே போ' என்று சொன்னார். நானும் அவர் சொன்ன இடத்திற்கு ஓடிச் சென்று அடுத்த பந்துக்காகத் தயாரானேன்.
இந்தக் கனவு கண்ட சில நாட்களிலேயே, தோனி இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். "ஐயோ, இந்திய நீல நிற ஜெர்சியில் தோனியின் கேப்டன்சியில் விளையாட வேண்டும் என்ற என் கனவு இனி எப்படி நனவாகும்?" என்று சஞ்சு சாம்சன் மிகுந்த கவலை அடைந்துள்ளார்.
ஆனால், சில வாரங்களிலேயே விதி ஒரு வாய்ப்பை வழங்கியது. மும்பையில் நடைபெற்ற 'இந்தியா ஏ' அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பயிற்சிப் போட்டியில் தோனி மீண்டும் ஒருமுறை கேப்டனாகச் செயல்பட்டார். அப்போது நடந்த சம்பவத்தை சஞ்சு உணர்ச்சிபொங்க விவரித்தார்.
"நான் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்தேன். அப்போது கேப்டன் தோனி என்னைப் பார்த்து, 'சஞ்சு, அங்கே போ'என்றார். என் கனவில் கேட்ட அதே குரல், அதே வார்த்தைகள்! நான் அப்படியே என் கனவில் நடந்தது போலவே ஓடிச் சென்று அந்த இடத்தில் நின்றேன். இறுதியாக என் கனவு நனவானது என்றார்.
Sanju Samson shared a 'dream come true' moment about MS Dhoni:
"I once had a dream where Dhoni bhai was captain and was setting the field. I was standing in slip, and he told me, "Sanju, wahan ja." I ran to my position and got ready for the next ball.
A few days later, I… pic.twitter.com/oc3JffEiQT
- Abhishek Kumar (@Abhishek060722)

