தேர்தல் முடிவுகள் குறித்த துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற 'ஆக்சிஸ் மை இந்தியா' (Axis My India) நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் குப்தா, தங்களது கணிப்பு நிஜமானதை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்.
தமிழகத் தேர்தல் முடிவுகள் தங்களது நிறுவனம் வெளியிட்ட எக்சிட் போல் கணிப்புடன் ஒத்துப்போனதைத் தொடர்ந்து, அவர் தனது அலுவலக ஊழியர்களுடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், அந்த மகிழ்ச்சியில் அவர் நடனமாடிய வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பல அரசியல் விமர்சகர்களும், நெட்டிசன்களும் தங்களது கணிப்பு இவ்வளவு துல்லியமாக அமைந்ததற்காக பிரதீப் குப்தாவைப் பாராட்டி வரும் நிலையில், அவரது இந்த ஜாலியான கொண்டாட்டமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. "நாங்கள் சொன்னது போலவே தேர்தல் முடிவுகள் வந்துள்ளது" என்ற திருப்தியுடன் அவர் ஆடிய ஆட்டம் இப்போது சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டிங்!

