Dailyhunt
"நத்தத்தில் மீண்டும் நத்தம் விஸ்வநாதன்!" - அதிமுகவின் கோட்டையைத் தகர்க்க முடியாத தவெக, திமுக வேட்பாளர்கள்

"நத்தத்தில் மீண்டும் நத்தம் விஸ்வநாதன்!" - அதிமுகவின் கோட்டையைத் தகர்க்க முடியாத தவெக, திமுக வேட்பாளர்கள்

மிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகளில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் வெற்றியைத் தன்வசமாக்கியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையே மிகக் கடுமையான போட்டி நிலவி வந்தது. 15 சுற்றுகளின் முடிவில், நத்தம் விஸ்வநாதன் 18,143 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் எல்.என்.ரமேஷை (16,266 வாக்குகள்) சுமார் 1,877 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

​திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். நத்தம் தொகுதியில் தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள விஸ்வநாதன், அதிமுக முகாமிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு முக்கியமான வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நத்தம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai