Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நீ நல்லா சாப்பிட்டப்பா.. நான் இன்னும் சாப்பிடல" பஸ் வரலன்னு கேட்ட இளைஞர்.. அமைச்சர் கொடுத்த சர்ச்சையான பதில்..!!

"நீ நல்லா சாப்பிட்டப்பா.. நான் இன்னும் சாப்பிடல" பஸ் வரலன்னு கேட்ட இளைஞர்.. அமைச்சர் கொடுத்த சர்ச்சையான பதில்..!!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் முன்பதிவு செய்த பேருந்து முக்கால் மணி நேரமாகியும் வராததால், அங்கிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் புகார் அளித்த இளைஞருக்கு அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ் வரவில்லை என அந்த பயணி நியாயமாகக் கேள்வி எழுப்பிய போது, அதற்கு தீர்வு சொல்ல வேண்டிய அமைச்சர், சம்பந்தமே இல்லாமல் "தம்பி நீ நல்லா சாப்பிட்டப்பா.. நான் இன்னும் சாப்பிடல" என மேடையில் பேசுவது போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கிருந்த பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​இந்த விசித்திரமான வாக்குவாதம் தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து அமைச்சருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. "பொதுமக்கள் தங்களின் அவசரப் தேவைக்காகவும், போக்குவரத்துப் பிரச்சனைக்கும் தீர்வு கேட்டால் ஒரு பொறுப்பான அமைச்சர் அளிக்கும் பதில் இதுதானா?" என்று சமூக வலைத்தளங்களில் வாசகர்கள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பி இந்த செய்தியை செம ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai