உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷம்புத்யாயல் கோரி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது 9 மாதக் குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்றும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த ஷம்புத்யாயல் தனது மனைவியைக் கொலை செய்ய முயன்று கோடாரியால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மனைவியைத் தொடர்ந்து, பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் தனது சொந்தக் குழந்தையையே கோடாரியால் வெட்டியதில், அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலையாளி ஷம்புத்யாயலை உடனடியாகக் கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவருக்குச் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. குடும்பச் சண்டையில் தந்தை ஒருவரே தன் குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

