Dailyhunt
நெஞ்சை உலுக்கிய காட்சி! ஓடிவந்து ஜீவாவை கட்டிப்பிடித்து கதறி அழுத விஜய். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அஞ்சலியில் உடைந்த தவெக தலைவர்..!!

நெஞ்சை உலுக்கிய காட்சி! ஓடிவந்து ஜீவாவை கட்டிப்பிடித்து கதறி அழுத விஜய். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அஞ்சலியில் உடைந்த தவெக தலைவர்..!!

விபத்தில் அகால மரணமடைந்த திரையுலகின் ஜாம்பவான் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மறைவு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் சோகத்தில் மூழ்கடித்துள்ள நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தவெக தலைவர் விஜய்யின் உணர்ச்சிப்பூர்வமான தருணம் அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்துள்ளது.

ராஜஸ்தான் கார் விபத்தில் உயிரிழந்த சௌத்ரியின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நேரில் வந்த விஜய், தனது சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தயாரிப்பாளரின் உடலுக்குக் கண்ணீர் மல்க மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர், தந்தையை இழந்து தவித்து நின்ற நடிகர் ஜீவாவை கண்டதும் உணர்ச்சிவசப்பட்ட விஜய், ஓடிச்சென்று அவரை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுது அஞ்சலி செலுத்தியது, அங்கிருந்த ஒட்டுமொத்த திரையுலகினரையும், தொண்டர்களையும் சோகத்தில் உரைய வைத்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai