Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நேர்ல எல்லாம் ஆஜராக வேண்டாம்" அமைச்சர் மரியவில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ரிலீஃப்.. புதுச்சேரி நீதிமன்ற உத்தரவுக்கு திடீர் தடை..!!

"நேர்ல எல்லாம் ஆஜராக வேண்டாம்" அமைச்சர் மரியவில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ரிலீஃப்.. புதுச்சேரி நீதிமன்ற உத்தரவுக்கு திடீர் தடை..!!

மைச்சர் மரியவில்சன் குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அதிரடியாக விலக்கு அளித்து உத்தரவிட்டு அமைச்சருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

​மேலும், இந்த குடும்பப் பிரச்சினை வழக்கை நீதிமன்றத்தில் இழுத்தடிக்காமல் சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், வழக்கை உடனடியாக சமரச தீர்வு மையத்திற்கு (Mediation Centre) அனுப்பி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, வருகிற ஜூலை 13-ஆம் தேதி அன்று சமரச தீர்வு மையத்தில் இருதரப்பும் நேரில் ஆஜராகி பேசி தீர்வு காண வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால் இந்த விவகாரம் தற்போதைய அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai