Dailyhunt
"நிர்வாணக் கோலத்தில் பயனர்கள், வேடிக்கை பார்க்கும் ஏஐ" - ஸ்மார்ட் கிளாஸ் கேமராவால் கொடுமை.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

"நிர்வாணக் கோலத்தில் பயனர்கள், வேடிக்கை பார்க்கும் ஏஐ" - ஸ்மார்ட் கிளாஸ் கேமராவால் கொடுமை.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

மெட்டா நிறுவனத்தின் 'ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்' (Meta Smart Glasses) பயன்படுத்துபவர்களின் அந்தரங்கமான வீடியோக்கள், அந்த ஏஐ சிஸ்டத்திற்கு பயிற்சியளிக்கும் ஊழியர்களால் பார்க்கப்படுவதாக எழுந்துள்ள புகார் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேன்யாவைச் சேர்ந்த 'சாமா' (Sama) நிறுவனத்தின் ஊழியர்கள், ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பதிவான பாத்ரூம் காட்சிகள், உடலுறவு மற்றும் நிர்வாணக் காட்சிகளைத் தாங்கள் பார்க்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ரகசியங்கள் வெளியே கசிந்த சில வாரங்களிலேயே, மெட்டா நிறுவனம் சாமா நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

​இதனால் சுமார் 1,108 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மெட்டா நிறுவனம் தரக்கட்டுப்பாட்டு காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறினாலும், ஊழியர்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழல் மற்றும் அந்தரங்க மீறல்களை அவர்கள் வெளிப்படுத்தியதே இதற்குக் காரணம் என தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. பயனர்களின் ஒப்புதலுடனேயே இந்தத் தரவுகள் ஆய்வு செய்யப்படுவதாக மெட்டா தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு பெண்மணி அறியாமலேயே அவர் ஆடை மாற்றும் காட்சி பதிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னால் இருக்கும் மனித உழைப்பு மற்றும் தனிமனித ரகசியப் பாதுகாப்பு குறித்த பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai