Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நோ சிக்கன், நோ பீட்சா..!" - பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரின் மிரட்டல் டயட் பிளான்.. 2026 ஐபிஎல்-ன் 'சிக்ஸர் மெஷின்' சாப்பிடும் 'அந்த' ஒரு பொருள்..!!"

"நோ சிக்கன், நோ பீட்சா..!" - பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரின் மிரட்டல் டயட் பிளான்.. 2026 ஐபிஎல்-ன் 'சிக்ஸர் மெஷின்' சாப்பிடும் 'அந்த' ஒரு பொருள்..!!"

பிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் தொடர்ந்து 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் அதிரடி ஆட்டத்திற்குப் பின்னால் அவரது கடுமையான உணவுக்கட்டுப்பாடு முக்கியக் காரணமாக இருக்கிறது.

கிரிக்கெட்டில் சாதிப்பதற்காகத் தனக்கு மிகவும் பிடித்த மட்டன், சிக்கன், பீட்சா மற்றும் பீகாரின் புகழ்பெற்ற 'லிட்டி சோகா' ஆகிய உணவுகளை அவர் முழுமையாகத் தவிர்த்துள்ளார். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், ஸ்டாமினாவை அதிகரிக்கவும் அவரது தந்தை மற்றும் பயிற்சியாளரின் அறிவுரைப்படி இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 2026 முதல் அசைவ உணவுகள் மற்றும் முட்டையை முற்றிலும் தவிர்த்துவிட்டு, வைபவ் சூர்யவன்சி இப்போது தீவிரமான தூய சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வருகிறார்.

அவரது தற்போதைய உணவில் புரதச்சத்திற்காக பருப்பு, பன்னீர், பால், மோர் மற்றும் தயிர் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றன; கார்போஹைட்ரேட்டிற்காக பிரவுன் ரைஸ், ஓட்ஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் தானியங்களால் ஆன சப்பாத்திகளைச் சாப்பிடுகிறார்.

மேலும், நோய் எதிர்ப்புச் சக்திக்காக கீரை, புரோக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகளையும், ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களையும், எனர்ஜிக்காக உலர் பழங்களையும் எடுத்துக்கொள்கிறார்.

எந்தவிதமான விலையுயர்ந்த புரோட்டீன் பவுடர்களையோ அல்லது வெளிநாட்டு சப்ளிமெண்ட்களையோ பயன்படுத்தாத வைபவ், போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு வீட்டில் சமைத்த எளிமையான சைவ உணவுகளையே சாப்பிடுகிறார்.

பீட்சா, பர்கர், வறுத்த உணவுகள் மற்றும் அதிக இனிப்புகளை முற்றிலும் தவிர்ப்பதோடு, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதிலும் அவர் தீவிர கவனம் செலுத்துகிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai