Dailyhunt
ஒரே ஒரு போட்டோ.. மொத்த இணையமும் ஷாக். ஹர்திக் பாண்டியா வாழ்வில் மீண்டும் நடாஷாவா?. விவாகரத்துக்குப் பின் நடந்த ட்விஸ்ட்.!!!

ஒரே ஒரு போட்டோ.. மொத்த இணையமும் ஷாக். ஹர்திக் பாண்டியா வாழ்வில் மீண்டும் நடாஷாவா?. விவாகரத்துக்குப் பின் நடந்த ட்விஸ்ட்.!!!

ந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவைப் பிரிந்த பிறகு, அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் சமீபத்தில் வதோதராவில் உள்ள ஹர்திக்கின் குடும்பத்தினரைச் சந்தித்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகனுடன் தற்போது வதோதராவில் இருக்கும் நடாஷா, ஹர்திக்கின் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சந்திப்பு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் இணக்கம் ஏற்படுகிறதா அல்லது தங்கள் மகனுக்காக நட்புறவைத் தொடர்கிறார்களா என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது. நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த இவர்கள், மீண்டும் சந்தித்துக் கொண்ட தகவல் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

மேலும் ஹர்திக் பாண்டியாவின் குடும்பத்தாருடன் நடாஷா இப்போதும் இணக்கமான சூழலைப் பேணி வருவது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு நடாஷா வெளிநாடு சென்றிருந்த நிலையில், தற்போது இந்தியா திரும்பி மீண்டும் பாண்டியாவின் குடும்பத்தைச் சந்தித்திருப்பது கிரிக்கெட் மற்றும் சினிமா வட்டாரத்தில் முக்கியச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai