Dailyhunt
ஒரே ஒரு ட்வீட். மொத்தமாக சரிந்த டிரம்ப் சாம்ராஜ்யம். உலகையே அதிரவைத்த அந்த வார்த்தை. அமெரிக்க எம்.பி.க்கள் எடுத்த அதிரடி முடிவு.!!!

ஒரே ஒரு ட்வீட். மொத்தமாக சரிந்த டிரம்ப் சாம்ராஜ்யம். உலகையே அதிரவைத்த அந்த வார்த்தை. அமெரிக்க எம்.பி.க்கள் எடுத்த அதிரடி முடிவு.!!!

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

டிரம்பின் இந்தச் செயல் அவரது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுமார் ஐந்து எம்பிக்கள் டிரம்ப் தனது கடமைகளைச் செய்யத் தகுதியற்றவர் என்றும், உலக அமைதிக்கு அவர் அச்சுறுத்தலாக மாறிவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தின்படி, ஒரு அதிபர் தனது கடமைகளைச் செய்ய உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ தகுதியற்றவர் என அமைச்சரவை கருதினால், அவரைப் பதவியிலிருந்து நீக்க வழிவகை உள்ளது.

இதனால் அவ்வாறு டிரம்ப் நீக்கப்பட்டால், துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அதிபர் பொறுப்பை ஏற்பார். இந்தச் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவையின் பெரும்பான்மை ஒப்புதலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டிரம்ப் இந்த விவகாரத்தால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், அவர் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai