Dailyhunt
ஒரு பக்கம் லட்சக்கணக்குல ஓட்டு.. இன்னொரு பக்கம் வெறும் ஒத்த ஓட்டு வித்தியாசம்!  ஆடிப்போன அரசியல் களம்..!!

ஒரு பக்கம் லட்சக்கணக்குல ஓட்டு.. இன்னொரு பக்கம் வெறும் ஒத்த ஓட்டு வித்தியாசம்! ஆடிப்போன அரசியல் களம்..!!

மிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில், இரண்டு துருவங்களாக அமைந்த இரண்டு வெற்றிகள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் திகைக்க வைத்துள்ளன.

ஒருபுறம், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாரை விட 98,110 வாக்குகள் அதிகம் பெற்று, தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துத் தனது கோட்டையைத் தக்கவைத்துள்ளார்.

மறுபுறம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், 'ஒவ்வொரு வாக்கும் சரித்திரம் படைக்கும்' என்பதற்கு இலக்கணமாக, தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, அமைச்சர் பெரியகருப்பனை வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, மாநிலத்திலேயே மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற த்ரில்லர் சாதனையைப் பதிவு செய்துள்ளார். எடப்பாடியின் அசுர பலமும், திருப்பத்தூரின் நூலிழை வெற்றியும் இந்தத் தேர்தலின் மிக முக்கியமான மைல்கற்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai