Dailyhunt
"ஒரு கோடி ரூபாய் கார்.. 20 கோடி ரூபாய் சொத்து" உதயநிதி தாக்கல் செய்த வேட்பு மனு.. வைரலாகும் சொத்து விபரம்..!!

"ஒரு கோடி ரூபாய் கார்.. 20 கோடி ரூபாய் சொத்து" உதயநிதி தாக்கல் செய்த வேட்பு மனு.. வைரலாகும் சொத்து விபரம்..!!

மிழகத் துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காகத் தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில், தனக்கு ₹12.92 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ₹7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், அவரிடம் சுமார் ₹1 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த 'டிஃபெண்டர்' (Defender) காரும், ₹23 லட்சம் மதிப்பிலான 'இன்னோவா' (Innova) காரும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை விடச் சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அவரது கார் கலெக்ஷன் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai