Dailyhunt
ஒரு வேட்பாளர் எத்தனை ஓட்டுகள் வாங்கினால் டெபாசிட் தப்பும்?. அரசியல்வாதிகளுக்கு அடிவயிற்றில் பீதி.. யாரும் சொல்லாத உண்மைகள்.!!!

ஒரு வேட்பாளர் எத்தனை ஓட்டுகள் வாங்கினால் டெபாசிட் தப்பும்?. அரசியல்வாதிகளுக்கு அடிவயிற்றில் பீதி.. யாரும் சொல்லாத உண்மைகள்.!!!

ந்தியத் தேர்தல் விதிமுறைகளின்படி, நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிணைத் தொகையாக தேர்தல் ஆணையத்தில் செலுத்த வேண்டும்.

தற்போது மக்களவைத் தேர்தலுக்கு 25,000 ரூபாயும், சட்டமன்றத் தேர்தலுக்கு 10,000 ரூபாயும் பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு இதில் பாதித் தொகை போதுமானது.

மேலும் ஒரு வேட்பாளர் தான் போட்டியிட்ட தொகுதியில் பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தது ஆறில் ஒரு பங்கு (1/6) வாக்குகளைப் பெற்றால் மட்டுமே, அவர் செலுத்திய டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற முடியும். அதாவது, சுமார் 16.67 சதவீத வாக்குகளைப் பெறத் தவறினால், அந்த வேட்பாளர் தனது டெபாசிட் தொகையை இழக்க நேரிடும். இதுவே அரசியல் வட்டாரத்தில் 'டெபாசிட் காலி' என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.

இதனால் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியுற்றாலும், அவர் 1/6 பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் அவரது டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படும். ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் செல்லாத வாக்குகளைக் கழித்த பிறகு வரும் 'செல்லத்தக்க வாக்குகளை' அடிப்படையாகக் கொண்டே இந்த கணக்கீடு செய்யப்படுகிறது.

மேலும் தேர்தல் ஆணையம் இத்தகைய பிணைத் தொகையை வசூலிப்பதன் முக்கிய நோக்கம், தேர்தலில் தீவிரமாகப் போட்டியிடாத மற்றும் தேவையற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே ஆகும். இதன் மூலம் உண்மையான நோக்கத்துடன் களமிறங்கும் வேட்பாளர்கள் மட்டுமே ஜனநாயக முறைப்படி ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒருவேளை தேர்தல் முடிவதற்கு முன்னரே ஒரு வேட்பாளர் இறந்துவிட்டால், அந்தத் தொகை அவரது வாரிசுகளுக்குத் திருப்பித் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai