செய்தி சோலை

724k Followers

ரேஷன் அட்டையில்.. குடும்ப தலைவர் பெயரை மாற்ற.. வெளியான புதிய அறிவிப்பு.!!!

25 Jul 2021.9:06 PM

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒருசிலர் ரேஷன் கார்டில் திருத்தங்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்றுவதற்கு www.tnpds.gov.in என்ற அரசு அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று லாகின் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு குடும்ப தலைவராக மாற்றுவோரின் பெயருக்கு நேராக உள்ள பாக்ஸில் கிளிக் செய்யவும்.

அடுத்து குடும்ப தலைவராக மாற்ற விரும்புவோரரின் ஆதார், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்று இதில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவும். அவர்களுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயர் மாறிவிடும்.

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Seithisolai