சமீபத்தில் சுமார் 12 டன் எடை கொண்ட கிட்கேட் சாக்லேட்கள் மர்மமான முறையில் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள கிட்கேட் நிறுவனம், இது தொடர்பாக அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட குளறுபடிகளைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட முறையில் இந்தத் திருட்டு நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க பாதுகாப்பு நடைமுறைகள் பலப்படுத்தப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவம் சாக்லேட் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டவிரோதமான வழிகளில் விற்பனை செய்யப்படும் சாக்லேட்டுகளை வாங்க வேண்டாம் என்று நுகர்வோருக்கு கிட்கேட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தரமற்ற முறையில் சேமிக்கப்படும் சாக்லேட்டுகள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதால், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே பொருட்களை வாங்குமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையினரின் உதவியுடன் திருடப்பட்ட சரக்குகளை மீட்கவும், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் சட்டத்தின் முன் நிறுத்தவும் நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

